???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கானகத்திற்கு அழைத்து சென்ற புகைப்படக் கலைஞர்கள்!

Posted : புதன்கிழமை,   ஜுன்   26 , 2019  06:53:27 IST


Andhimazhai Image
மெட்ராஸ் புகைப்பட கலைஞர்கள் சங்கம்(photographic society of madras) சார்பாக லலித் கலா அகாதமியில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜூன் 19 முதல் 25 ம் தேதிவரை மதியம் 12 முதல் இரவு 8 மணிவரை இந்த கண்காட்சி நடைபெற்றது.
 
 
அரங்கத்திற்குள் நுழைந்ததும் 50 மேற்பட்ட புகைப்படங்கள் எதை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு அனைத்து புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்தன.  காலை மஞ்சள்  வெயிலில் ஆள் உயரம் வளர்ந்த புற்களுக்கு  நடுவில் நிற்கும் புள்ளிமான் கூட்டம், தண்ணீரில் இருந்து எழும்பும் பறவை, கானகத்தில் தனியாக நிற்கும் குதிரை,  மல்யுத்தம் செய்வது போல் தும்பிக்கையை பயன்படுத்தி மோதிக்கொள்ளும் இரு  யானைகள், இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டுமே என்று ஏங்கி நிற்கும் நத்தை..
 
 
 
என்று ஒரு கானகத்தை லலித் கலா அகாதமியின் அரங்கத்திற்குள் அடைத்து வைத்ததுபோல் இருந்தது. மாசில்லாத நதிகள்,  இமய மலையின் பனி நிறைந்த மலைகள்,  நதியின் கரையில் அமர்ந்து ரசிக்கும் பெண் என்று எண்ணற்ற புகைப்படங்கள்.
 
 
 
அரங்கத்தின் ஏசியின் குளிரில் , இந்த புகைப்படத்தை பார்த்தபோது எதோ கானகத்திற்கும், பனிகள் படர்ந்த மலைக்கும் சென்று வந்ததுபோல ஓரு உணர்வு ஏற்பட்டது.இயற்கையை மட்டுமல்லாமல் மனிதர்களையும், கட்டிடங்களையும், நாடக நடிகர்களின் முக பாவனைகளையும் மிக நெர்த்தியாக தங்களின் ஒளி மொழியால்  புகைப்படக் கலைஞர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
 
 
பிஎஸ்எம் கூட்டமைப்பை சேர்ந்த 87 புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எல்லா வருடமும் பிஎஸ்எம் சார்பில் இதுபோன்ற புகைப்படக்  கண்காட்சி நடத்தப்படுகிறது.
 
கண்காட்சின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் தினமலர் பத்திரிக்கையின் மூத்த புகைப்பட கலைஞர் முருக ராஜ் கலந்து கொண்டார். 
 
 
பிஎஸ்எம்-யின் துணை தலைவர் ஜெயானந்த் கோவிந்தராஜூ வரவேற்புரை வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் முருக ராஜ் கூறுகையில், இந்த மேடையில் நான் நிற்க காரணமான பழமையும், பெருமையும் மிக்க பிஎஸ்எம் அமைப்புக்கும், நான் சார்ந்திருக்கும் தினமலர் நிர்வாகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
 
 
நீங்கள் எடுத்த புகைப்படங்களை பார்த்த பார்வையாளர்கள் உணர்ச்சி பொங்க வெளிப்படுத்திய கருத்துகள்தான் உங்களுக்கு கிடைத்த முதல் சான்றிதழ். நான் இப்போது உங்களுக்கு கொடுக்க இருப்பது இரண்டாவது சான்றிதழே. எனக்கும் அப்படித்தான்.
 
 
விருதுகளைவிட, பத்திரிக்கையில் எனது புகைப்படத்தை பார்த்துவிட்டு என்னிடம் பேசும் மக்களின் கருத்துகளை, பாராட்டுகளைத்தான் நான் பெரிதாக மதிக்கிறேன். இந்த புகைப்படங்கள் என் தேடலை மேலும் அதிகரித்துள்ளது. இங்கேதான் என்னை நான் புத்தாக்கம் செய்துகொள்கிறேன். என்னை அழைத்து கவுரவப்படுத்தியதற்கு நன்றி’ என்று தெரிவித்தார்.
 
 
 
இதைத்தொடர்ந்து 87 புகைப்படக் கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...