அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2021  14:41:17 IST


Andhimazhai Image

நியூசிலாந்தில் உள்ள வில்லோபேங் வனவிலங்கு சரணாலயத்தில் கியா என்கிற நியூசிலாந்து கிளிகள் சுமார் 15 என்ற எண்ணிக்கையில் உள்ளன. இவைகளில் புரூஸ் என்ற கிளி வித்தியாசமானது. இதன்  புத்திசாலித்தனம் அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரை வெளியிடும் அளவுக்கு இருக்கிறது.

 
என்ன செய்கிறது புரூஸ்?

புரூஸை சில ஆண்டுகளுக்கு முன் குஞ்சாக இருந்தபோது காட்டுக்குள் கண்டெடுத்தனர் விஞ்ஞானிகள். அப்போது அதன் அலகின் மேல்பகுதி உடைந்துபோயிருந்தது. இதைக் கொண்டுவந்து சிகிச்சை அளித்து சரிசெய்தனர். ஆனால் மூக்கு உடைந்த மாதிரியே இருந்தது.


பிறகு அது சரணாலயத்தில் வளர்ந்தது. தன் உடலில் ஏற்பட்டிருக்கும் ஊனத்தை சரிசெய்ய அது கண்டுபிடித்திருக்கும் வழிகள்தான் இது தொடர்பானவர்களை வியக்க வைத்துள்ளது.


இது தொடர்பான கட்டுரை ஒன்றையும் அவர்கள் ’சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.


புரூஸின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் மூகமாகவே அதன் புத்திசாலித்தனத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கின்றனர்.

 
தன் மீதுள்ள ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்கும், அழுக்குகளை நீக்குவதற்கும், உணவுப் பொருட்களைக் கொத்தி எடுப்பதற்கும்  பறவைகளுக்கு அலகு மிக அவசியமானதாகும். புரூஸ் தனது ஒற்றை அலகாலேயே இந்த எல்லா வேலைகளையும் செய்து வந்துள்ளது. அதற்கு விரைவில் கூழாங்கல் ஒன்றைப் பயன்படுத்தித் தீர்வையும் கண்டுள்ளது.


தன் முன்னே நிறையக் கூழாங்கற்கள் இருந்தாலும், அவற்றில் சரியான கூழாங்கல்லைத் தேர்வு செய்கிறது. தேர்வு செய்த கூழாங்கல்லை நாக்கிற்கு கீழும், கீழ் அலகிற்கு மேலும் வைத்து தனது அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கிறது. அதைக்கொண்டு தன் இறகுகளைக் கோதிக்கொள்கிறது.


சும்மா கூட வாயில் அந்தக் கல்லை வைத்துக்கொண்டிருக்கும் என்ற சந்தேகம் எழுந்ததால் ஆராய்ச்சியாளர்கள் அதை மேலும் கண்காணித்தனர்.


90 சதவீதம் அது கூழாங்கல்லை எடுக்கும்போதெல்லாம் தன் இறகுகளைக் கோதிக்கொள்ளவே பயன்படுத்தியது.


வாயிலிருந்து கீழே விழுந்தால் அதே கூழாங்கல்லைத் தேடி எடுக்கிறது. இல்லையெனில் அதேபோல் வேறு கல்லை எடுத்துக்கொள்கிறது. பெரிய சைஸ் கற்கள், குச்சிகள் இருப்பினும் அது ஒரே அளவிலான கூழாங்கற்களையே எப்போதும் எடுக்கிறது.


இதைக் கொண்டே அந்த கிளி தெரிந்தேதான், தன் ஊனத்தை சரிசெய்யும் ஒரு கருவியாக அந்த கல்லைப் பயன்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.


புரூஸூக்கு செயற்கையான அலகு எதுவும் தேவைப்படவில்லை எனவும், அது தனது சொந்தங்களுடன் நலமுடன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...