அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அந்த நாற்காலிக்கு வயது நூறு!

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   02 , 2021  15:31:57 IST


Andhimazhai Image

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 1921 ஆம் ஆண்டு சட்டமன்ற அமர்வை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடும் நிலையில்,  இந்த சட்டமன்றத்தில் வழக்கமாக சபாநாயகர் அமரும் இருக்கையும் இன்னும் சில மாதங்களில் நூறு வயதை எட்டப்போகிறது.


சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவும், அவருடைய மனைவியும் கலைநயமிக்க இந்த நாற்காலியை சென்னை மாகாண சட்டமன்றத்தின் அப்போதைய தலைவருக்குத் தனிப்பட்ட முறையிலான பரிசாக கடந்த 1922-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி வழங்கினர். அதில் தான் சட்டமன்ற நாயகர்கள் வழக்கமாக அமர்ந்து வருகின்றனர்.


இவர்கள் பரிசாக கொடுத்த நாற்காலி, சென்னை மாகாணத்தின் ஜனநாயக மரபுகளுக்கு இன்றளவும் சாட்சியாக திகழ்கிறது. இந்த நாற்காலி தேக்கு மரத்தினால் கலைநயத்துடன் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவைகளில் சபாநாயகருக்கு என்று வடிவமைக்கப்பட்டுள்ள நாற்காலியைப் போன்றே, இந்த நாற்காலியும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலைக்கழக உள்ள செனட் அரங்கம், ராஜாஜி அரங்கம், பழைய கலைவாணர் அரங்கம், ஊட்டியில் உள்ள மாளிகை உள்பட பல்வேறு இடங்களுக்கு இந்த நாற்காலி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலிருந்து பலமுறை கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு முதல் சேப்பாக்கத்தில் உள்ள புதிய கலைவாணர் அரங்கத்தில், இந்த நாற்காலி வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாற்காலியை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகிறது சட்டசபை செயலகம்.  


சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்த நாற்காலிக்கு ‘வார்னிஷ்’ அடிக்கப்படுகிறது. பஞ்சு இருக்கைகளும் சீரான இடைவெளியில் மாற்றம் செய்யப்படுகின்றன. நாற்காலியின் ரகசிய அறைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. சபாநாயகரைத் தவிர, சபாநாயகர் பொறுப்புக்கு மேலான அதிகாரம் படைத்தவர்கள் அந்த நாற்காலியில் அமரலாம். ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற வரும்போது, இந்த நாற்காலி அவர் அமருவதற்காக வழங்கப்படுகிறது.


இந்த  நாற்காலியில் அமர்ந்த உச்சகட்ட அரசியல் சாசனப் பிரமுகர் குடியரசுத் தலைவர்.  சில சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நடக்காமல் இல்லை. இந்த நாற்காலியில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து ரகளை செய்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. அதேபோல், சபாநாயகரின் ஒப்புதலுடன் ஒருமுறை முதலமைச்சர் ஒருவரும் அந்த இருக்கையில் அமர்ந்ததும் நடந்துள்ளது.
நாற்காலிகள் வெறும் நாற்காலிகள் அல்ல. அதுவும் நூறாண்டு பழைமையான பொருள், அதிகாரத்துடன் தொடர்புடையது என்கிறபோது அதற்கே கூட தனி மவுசு வந்துவிடுகிறது! 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...