அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2022  17:58:12 IST

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார் நிதீஷ் குமார்.

 
பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில்,  ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இன்று தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டன.

 
பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டால் ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன.

 
இதனைத் தொடர்ந்து, முதல்வர் நிதீஷ் குமார், பீகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கூட்டணி முறிந்தது.

 
இதன் பின்னர், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்ற நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் நிதீஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளனர்.

 
ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...