![]() |
விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!Posted : வெள்ளிக்கிழமை, மே 13 , 2022 19:06:31 IST
விக்ரம் திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் விக்ரம். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய 'பத்தல... பத்தல...' எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரெய்லர் மே 15ஆம் தேதியும் படம் ஜூன் 13ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
|
|