அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 8 - ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   23 , 2021  18:02:42 IST


Andhimazhai Image

தமிழ் படைப்புலகிற்குள் நன்கு அறிமுகமானவர் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித். காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ இவரின் புதிய நாவலாகும்.

வித்தியாசமான தலைப்புடன் வெளிவந்திருக்கும் நாவலின் கதைக்களம் பற்றி சுரேஷ்குமார இந்திரஜித்திடம் கேட்டோம்.

‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ ஒரு நவீன கதை. கர்நாடக இசைப் பாடகி ஒருவளின் கதையும், மாயப்பிறவி ஒருவனின் கதையுமே இந்த நாவல். இந்த இரண்டு கதைகளும் நாவலில் இணையாக செல்லும்.

மறைதலை (Disappearance) அடிப்படையாகக் கொண்டுதான் இந்த எழுதியிருக்கிறேன். அது தான் நாவலின் மையம்.

நம்முடைய வரலாற்றிலும் சில பேர் மறைந்து போயிருக்கின்றனர். மராட்டிய மன்னரான நானா சாகிப், மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமன், தமிழகத்தைச் சேர்ந்த துறவியான  பட்டினத்தார், வடலூரைச் சேர்ந்த வள்ளலார் ஆகியோர் மறைந்து போய் இருக்கின்றனர்.

நாவலின் வரும் நந்தினியின் கணவன் காணாமல் போய்விடுகிறான். அதன் பிறகு, நந்தினிக்கும் சபா உறுப்பினரான ஆனந்தனுக்கும் காதல் ஏற்படும். ஆனால், ஏற்கனவே ஆனந்தனுக்கு திருமணம் ஆகியிருக்கும்.

ஒருகட்டத்தில் ஆனந்தனும் - நந்தினியும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்கிறார்கள். ஆனந்தன் தன்னுடைய மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்குகிறான். நந்தினி தன்னுடைய கணவன் இறந்துபோனதற்கான சான்றிதழை சட்டப்படி வாங்குகிறாள்.

நந்தினியின் பாடல் திறனைப் பிரபலப்படுத்த ஆனந்தன் நிறைய மேடை அரங்கேற்றங்களுக்கு ஏற்பாடு செய்கிறான்.

ஒருநாள், அவர்கள் இருக்கும் பக்கத்து ஊர் கோவிலுக்கு சாமியார் ஒருவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, இருவரும் கோவிலுக்கு சென்று சாமியாரிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்கள். அந்த சாமியார் காணாமல் போன தன்னுடைய கணவன் மாதிரி இருப்பதாக நந்தினி நினைத்துக்கொள்கிறாள்.

அடுத்த நாள் நந்தினிக்கு மனப்பிறழ்வு ஏற்படுகிறது. அவளுடைய கணவன் தான் நந்தினியின் உடலுக்குள் இறங்கிவிட்டதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். பிறகு நந்தினியை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இத்துடன் இந்த கதை முடிவடைகிறது.

மற்றொரு கதையில் வரும் மாயப்பிறவி, வெவ்வேறு ரூபம் எடுத்து, வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு மனிதர்களிடம்  கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பான். பாரிஸில் அஸ்வத்தாமன் கதையையும், கான்பூரில் நானா சாகிப்பின் கதையையும், வடலூரில் வள்ளலாரின் கதையையும் சொல்லிக் கொண்டிருப்பான்.

தான் யார் என்று தெரியாமல், ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கும் மாயப்பிறவி கடலுக்குள் குதித்து மறைந்து போவான்.

நந்தினி மருத்துவமனைக்குச் செல்வதுடனும், மாயப்பிறவி கடலுக்குள் குதிப்பதுடனும் நாவல் நிறைவடைகிறது.

மாயப்பிறவி தான் நந்தினியின் கணவனா? நந்தினிக்கும் ஆனந்தனுக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது வாசகர்களின் கற்பனைக்கு விட்டிருக்கிறது.

போர்ஹே, ஒரு கதைக்குத் தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை என்பார். அதுபோலத்தான் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’ நாவலும் . இந்த நாவலுக்கு தொடக்கம் உள்ளது. ஆனால், முடிவு புதிராக உள்ளது” என்றார் சுரேஷ்குமார இந்திரஜித்.

 

நாவல்: ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’
ஆசிரியர்: சுரேஷ்குமார இந்திரஜித்
பதிப்பகம்: காலச்சுவடு
விலை: ரூ.150

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...