அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 6 - மூத்த அகதி

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   21 , 2021  18:14:43 IST


Andhimazhai Image

ஜெப்னா பேக்கரி, கலாதீபம்லொட்ஜ், புத்திரன் ஆகிய நாவல்களின் வழி ஈழ அகதிகளின் அக - புற போராட்டத்தை தனது படைப்புகளின் வழியே பதிவு செய்திருப்பவர் எழுத்தாளர் வாசு முருகவேல். ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் இந்த ஆண்டிற்கான இலக்கிய விருதைப் பெற்றிருக்கிறது அவருடைய நான்காவது நாவலான ‘மூத்த அகதி’.

“‘மூத்த அகதி’ சென்னையில் வாழக்கூடிய ஈழ அகதிகள் பற்றிய ஒரு நாவல்” என  ஆரம்பத்திலேயே நாவலின் ‘ஒன் லைனை’ கூறியவர்,  நாவலின் கதைக்களம் என்ன என்பதை விரிவாக சொல்ல ஆரம்பித்தார்.

“ஈழ அகதிகளில் பல தரப்பினர் உள்ளனர். ஈழத்திலேயே இருந்தாலும் தங்களுடைய சொந்த நிலங்களில் வாழமுடியாதவர்கள் முதல் தரப்பினர்.  தமிழகத்தில் அகதி முகாம்களில் வாழக்கூடியவர்கள், முகாம்களுக்கு வெளியே தனியாக வீடுகளில் வாழக்கூடியவர்கள் இரண்டாம் தரப்பினர் ஆவர்.

அகதி முகாம்களுக்கு வெளியே வாழக்கூடியவர்களுக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடு கிடைப்பது சிரமம் நிறைந்தது. இன்னொரு நாட்டிலிருந்து வந்திருப்பவர்கள், குடியுரிமை இல்லாதவர்கள், புலம்பெயர்ந்து வந்திருப்பவர்கள் என்ற அச்சம் வீடு கொடுப்பவர்களிடம் இருக்கின்றது. தப்பித்தவறி யாராவது ஒருவர் வீடு கொடுப்பதே பெரிய விஷயம். சில இடங்களில் சிலோன்காரர்களுக்கு வீடு இல்லை என்றே சொல்லிவிடுவார்கள்.

வீடு கிடைப்பதில் தொடங்கும் பிரச்சனை, வேலை கிடைப்பது வரை நீள்கிறது. ஈழத்தைச் சேர்ந்தவன் என்று தெரியாத வரை எந்த பிரச்சனையும் இல்லை. தெரிந்துவிட்டால் எதாவது ஒரு காரணம் சொல்லி வேலையிலிருந்து அனுப்பிவிடுவார்கள். ஈழ அகதிகளுக்கு வாழ்தல் என்பதே சிக்கல் நிறைந்தது.

மூன்றாவது தரப்பினர், இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இருக்கக் கூடிய அகதிகள். அவர்கள் அந்தந்த நாடுகளில் குடிமகன்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. நிலத்தை இழந்த பிரச்சனை பொதுவானதாக இருந்தாலும், அகதிகளுக்கு இடையேயான பிரச்சனைகள் மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன.

‘மூத்த அகதி’ நாவலில் நான் எழுத விரும்பியது அகதிகளுடைய எல்லா பிரச்சனைகளையும் தான். கொள்ளளவு, வடிவம் சார்ந்த பிரச்சனையால், சென்னையில் வாழக்கூடிய அகதிகளை மையப்படுத்தி எழுதலாம் என்று முடிவெடுத்தேன்.

சென்னையில் வாழக்கூடிய அகதிகள் என்னவாக இருக்கின்றனர்? அவர்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகள் என்ன? அவர்களுடைய சுக துக்கங்கள், கொண்டாட்டங்கள், பிரச்சனைகள், சட்டச் சிக்கல் என்ன? என்பதெல்லாம் இந்த நாவலில் எழுதியிருக்கிறேன்.

வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய அகதிகள், இலங்கையிலிருந்து வரக்கூடிய அகதிகள் ஆகியோர் சந்திக்கக் கூடிய இடமாக சென்னை இருக்கின்றது. திருமணம் செய்துகொள்வதற்காக எல்லா நாடுகளிலும் உள்ள அகதிகள் சென்னைக்குத்தான் வருவார்கள். 2009-க்கு பிறகு இந்தப் பழக்கம் குறைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய அகதிகளின் வாழ்க்கை நிலையும், சென்னையில் இருக்கக் கூடிய அகதிகளின் வாழ்க்கை நிலையும் வேறாக உள்ளது. இந்த அகதிகளின் மனநிலை என்ன? இவர்களுடைய பிரச்சனை என்ன? இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்பது தான் இந்த நாவலின் மையம்.

தமிழில் ஈழம் தொடர்பான நாவல்கள் எழுதப்பட்டிருந்தாலும், சென்னையில் வாழக்கூடிய ஈழ அகதிகளை மையப்படுத்தி எழுதப்பட்ட முதல் நாவல் ‘மூத்த அகதி’. இனிமேல் இந்த களத்தை மையப்படுத்தி நிறைய நாவல்கள் வரலாம் என்று நினைக்கிறேன்.” என்றார்.

நாவல்: மூத்த அகதி
ஆசிரியர்: வாசு முருகவேல்
பதிப்பகம்: ஸீரோ டிகிரி
விலை: ரூ.290

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...