அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 3 - பாகன்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   17 , 2021  18:41:09 IST


Andhimazhai Image

எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்குள் நன்கு அறியப்பட்டவர். அவரின் அடுத்த நாவலான பாகனை யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நாவலின் கதைக்களம் என்பது பற்றி கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்து கொண்டதாவது, “தந்தையை மையப்படுத்திய சிறுகதை ஒன்றிரண்டு எழுதினேன். தந்தை என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் என்னென்ன? இன்னும் என்னென்ன அர்த்தங்களை அந்த சொற்களுக்கு நம்மால் தர முடியும் என்ற தேடலில் இருந்தபோது, நான் தந்தையானதும், என் தந்தையையும் இழந்ததும் நடந்தது. தனிப்பட்ட அனுபவமும் தேடலும் என்னுள் மெருகேறி ‘பாகன்’ என்ற நாவல் உருவானது,” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.


“தந்தை - மகன் உறவைப் பற்றியது தான் ‘பாகன்’ நாவல். தன்னுடன் பேசாதிருந்த தந்தை இறந்த பிறகு, அந்த பிணத்துடன் ஒரு இரவு முழுக்க மகன் நிகழ்த்தும் நீண்ட உரையாடலே நாவலின் கதைக்களம். இறந்துபோகும் தந்தைக்குத் தான் ஒரு சமையல்காரரா? தொடக்கப்பள்ளி ஆசிரியரா? என்ற அடையாளச் சிக்கல் இருக்கின்றது.  இதே போன்றதொரு அடையாளச் சிக்கல் மகனுக்கும் ஏற்படுகிறது.

தந்தை - மகன் உறவில் யார் எப்போது யானை ஆகிறார்? யார் எப்போது பாகன் ஆகிறார்? என்ற புதிர் தான் இந்த நாவல்.


எல்லோரும் இந்த நாவலுடன் இணைத்துக் கொள்ள முடியும். அப்பா - மகன் என்ற இருவருக்கானது என இந்த நாவலை வைத்துக் கொண்டாலும், ஏதோ ஒரு தருணத்தில் அவை உதிர்ந்துவிடும். ஏனெனில் வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் நாம் மகனாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்.


அடையாளச் சிக்கலும் குடும்பமும் எங்கு மோதுகிறது? குடும்பம் என்ற அமைப்பு எங்கு சிறையாக மாறுகிறது? என்பது போன்ற தன்மைகளை நாவலில் பேசியிருக்கிறேன்.


‘பாகன்’ கொரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. இந்த நெருக்கடிக் காலத்தை இடைவெளிகளால் நிரப்பப்பட்ட காலம் என்று சொல்லலாம் அல்லவா? நல்ல காரியங்களுக்கும் போக முடியாது. கெட்ட காரியங்களுக்கும் போக முடியாது. ஆனால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் முந்தைய காலத்தில் இருந்தது போல இருக்கும். இந்த சமயத்தில் உறவுகளின் மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.


நமக்கான அங்கீகாரம் என்ன? நம்முடைய அடையாளம் என்ன? இவற்றையெல்லாம் நாம் துறக்க வேண்டுமா? வேண்டாமா? அல்லது அந்த அடையாளங்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? போன்ற அடிப்படை கேள்விகளை இந்த நாவல் எழுப்பும் என நம்புகிறேன்” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

 

நூல்: பாகன்

ஆசிரியர்:கிருஷ்ணமூர்த்தி

பதிப்பகம்: யாவரும்

விலை: 155
 

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...