அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை: 2 - மாதி

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   16 , 2021  18:29:57 IST


Andhimazhai Image

கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோ.சுனில்ஜோகி. தன்னுடைய முதல் நாவலான ‘மாதி’யை நீலகிரி படகர் இன மக்களின் இனவரைவியல் நாவலாக எழுதி முடித்துள்ளார். பரிசல் வெளியீடாக வரவுள்ளது.

 
"நீலகிரி படகர்கள் குறித்து இனவரைவியல் நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவாகும். மேலும் படகர்களின் அகவய சமூகத்தினராக நின்றும் அம்மக்களைப்பற்றி எழுதப்பட்ட முதல் பெரு நாவலும் இதுவாகும்,” என்கிறார் ஜோகி.

 
”நாவலின் தலைப்பான ‘மாதி’, நீலகிரி மலையில் உள்ள படகர் இன மக்களுடைய பெண்பால் பெயரைக் குறிப்பதாகும். நாவல் முழுக்க முழுக்க படகர் இன பெண் ஒருவரைப் பற்றியது. மலையின் மீது ஏக்கத்தையும் பேரன்பையும் உட்செறித்துள்ள ஒரு பெண்ணின் மரபு மற்றும் பேரன்பு நிறைந்த அற வாழ்வின் பதிவுகளே இந்நாவலின் முழுக்கதை.

 
நீலகிரியில் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த மக்களின் வாழ்க்கை சூழலைப் பற்றிப் பேசுகிறது நாவல். அதேபோல், அங்கு வாழும் இனக்குழு மக்களுக்கு  இடையே இருந்த பண்டமாற்று முறையையும், மலை சூழ்ந்த இரண்டு கிராமங்களுக்கு இடையிலான உறவையும் பேசுகிறது.

 
நான் நீலகிரியிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதாலும்,  என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு படகர்கள் பற்றியது என்பதாலும், கடந்த இருபது வருடமாகப் படகர்கள் சார்ந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருவதாலும் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இந்த அனுபவங்களையும் சில உண்மை சம்பவங்களையும் புனைவாக்கி எழுதியுள்ளேன்.

 
‘குறிஞ்சித் தேன்’ என்ற நாவலின் வழியாக படகர்கள் பற்றிய முதல் புனைவை எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். அந்த நாவலைப் படிக்கக் கூடியவர்கள், நீலகிரியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கின்ற படகர்களின் சமகால வாழ்க்கை சித்திரத்தை அறிந்து கொள்வார்கள். ஆனால், அதையும் தாண்டி படகர்களிடம் அறம் சார்ந்த, இயற்கையோடு இயைந்து வாழக்கூடிய வாழ்க்கை முறையும் சகோதரத்துவம் நிறைந்துள்ளது. அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசையின் காரணமாகத்தான் இந்த நாவலை எழுதினேன்.

 
படகர்களின் மரபு, பண்பாடு, சடங்குகள், வழக்காறுகள் உள்ளிட்டவற்றைப் பேசியிருக்கிறேன். சிறிய கதை தான் என்றாலும் அதில் விரியும் காட்சியும், வெளியும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்றே நினைக்கிறேன். இணைய இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் நாவல் உலகில் ஆர்வத்துடன் நான் எடுத்துவைக்கும் முதல் அடி ‘மாதி’ நாவல், ” என்றார் சுனில் ஜோகி.

 

நாவல்: மாதி

ஆசிரியர்: சுனில் ஜோகி

பதிப்பகம்: பரிசல்

 

தா.பிரகாஷ்

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...