அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி: ரஜினி 0 பழனி முருகனுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! 0 சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர். என்.ரவி! 0 கொடியேற்றிய முதலமைச்சர்; விழாவை புறக்கணித்த முதல்வர்: தெலங்கானாவில் பரபரப்பு! 0 கொலிஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் வேண்டும்: சட்ட அமைச்சர் கடிதம் 0 “ஒன்று கூடுவோம் ஸ்டாலின்.. தமிழ்நாடு வாழ்க”: ட்வீட் செய்த கமல்ஹாசன்! 0 குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடியாது: நீதிமன்றம் உத்தரவு! 0 இருளர் பழங்குடி செயல்பாட்டாளர்களுக்கு பத்ம விருதுகள்! 0 ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 0 நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி 0 ஆளுநரின் தேநீர் விருந்து: ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள் 0 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு 0 "வீட்டை முற்றுகையிடுவோம்": தாமரைக்கு எதிராக ஜல்லிக்கட்டு அமைப்பு 0 மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள்: சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

புது நாவல் வரிசை:12 - ஆனந்தவல்லி

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   30 , 2021  10:14:22 IST


Andhimazhai Image

‘எழுதாப் பயணம்’ என்ற புத்தகத்தின் மூலம் எழுத்துலகிற்குள் நுழைந்த லஷ்மி பாலகிருஷ்ணன், ‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின் வழியாக புனைவு இலக்கியத்திற்குள் களமிறங்கியிருக்கிறார்.

பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக வந்துள்ள நாவலின் கதைக்களம் பற்றி அவரிடம் கேட்டோம்.

“தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுடைய ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியில் நடக்கக்கூடிய கதைதான் ஆனந்தவல்லி.

பிரிட்டிஷாரின் ஆதிக்கமும்,  சுதேசி மன்னர்களும் ஒத்திசைந்திருந்த பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தை பிரதிபலிக்கக்கூடிய நாவல் இது.

 

வெளிநாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டது தான் இதுவரை அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளூரிலேயே அடிமை முறை இருந்திருக்கிறது. அதில் பெண்களையும் விற்றிருக்கின்றனர். அப்படி விற்கப்பட்ட பெண் ஒருவரை மையப்படுத்தியே முழு நாவலையும் எழுதியிருக்கிறேன்.

ஆனந்தவல்லி என்ற பெண்ணுக்கு சிறிய வயதிலேயே திருமணம் நடக்கிறது. அது ஒரு பால்ய விவாகம். திருமணத்திற்கு பிறகு கணவன் வேலைத் தேடி வெளியூருக்கு சென்று விட, ஆனந்தவல்லிக்கு திருமணம் ஆனதை மறைத்து அரண்மனையில் விற்றுவிடுகிறார் அவருடைய தந்தை. ஊருக்குத் திரும்பி வரும் கணவன், மனைவி ஆனந்தவல்லியை மீட்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்கிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம் இது. இதை வைத்துத்தான் ஆனந்தவல்லியை எழுதினேன்.

தமிழகத்தில் கடைசியாக நடந்த உடன்கட்டை ஏறுதல் நிகழ்வையும் எழுதியிருக்கிறேன். உயர்குடி பெண்களுக்கும், அடிமையாக இருந்த பெண்களுக்கும் என்ன பிரச்சனை இருந்தது என்பதை நாவல் பேசுகிறது. உண்மை வரலாற்றைப் பேசக் கூடிய நாவல் என்பதால், வழக்கமான வரலாற்றுப் புனைவில் இருப்பது போன்ற பரபரப்பு, விறுவிறுப்பு எல்லாம் அதிகம் இருக்காது.


பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ போன்றவற்றை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது.

இந்த நாவல் வாசகர்களுக்கு நல்லதொரு வரலாற்று உணர்வைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.” என்றார் லஷ்மி பாலகிருஷ்ணன்.


நாவல்: ஆனந்தவல்லி
ஆசிரியர்: லஷ்மி பாலகிருஷ்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.230

 

தா.பிரகாஷ்

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...