அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

”பிரியங்கா காந்தியவை விடுவிக்காவிட்டால்…” நவ்ஜோத் சிங் எச்சரிக்கை!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   05 , 2021  18:31:39 IST

கைது செய்யப்பட்டுள்ள பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் நாளை உத்தரப்பிரதேசத்தை நோக்கி ஒட்டுமொத்த பஞ்சாப் காங்கிரஸும் பேரணி செல்லும் என நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "இந்த சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகனைக் கைது செய்யாமலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை விடுவிக்காமலும் இருந்தால் பஞ்சாப் காங்கிரஸ் லக்கீம்பூரை நோக்கி பேரணியில் ஈடுபடும்" என பதிவிட்டுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...