அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நதி: திரைவிமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   22 , 2022  10:44:05 IST


Andhimazhai Image

தான் வாழ விரும்பும் வாழ்க்கைக்கு எதிராக வந்து நிற்கும் சாதியவாதிகளை இளம் பெண் ஒருவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே 'நதி' திரைப்படம்.

சமூகத்தின் இருவேறு பிரிவுகளிலிருந்து கல்லூரிக்கு வருகின்றனர் நாயகன் ஷாம் ஜோன்ஸூம் (தமிழ்), நாயகி (பாரதி) ஆனந்தியும். பூப்பந்தாட்டத்தில் தேசிய அளவில் வெற்றி பெற்று, அதன் மூலம் அரசு வேலை வாங்கி செட்டிலாக வேண்டும் என நினைக்கிறார் நாயகன். நாயகியோ பெரிய இடத்து வீட்டுப் பெண். இருவரும் நட்பாகப் பழக ஆரம்பிக்க, அங்கு சந்தேகம் வந்து விழுகிறது நாயகியின் வீட்டிற்கு.

இந்த காதல் சேர்ந்தால் தங்களின் மான மரியாதை காற்றில் பறந்துவிடும் என வெகுண்டெழும் நாயகியின் குடும்பத்தார் நடத்தும் நயவஞ்சக நாடகமும், அவர்களின் பழிவாங்கலால் அல்லலுறும் நாயகனின் பரிதவிப்புமே படத்தின் மீதிக்கதை.

படத்தின் கதைக்களம் மதுரையில் நிகழ்கிறது. இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. காதல் பற்றி நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும், அதில் ஏதோ ஒன்று புதிதாக இருந்து கொண்டே இருக்கிறது. நதி திரைப்படமும் அப்படியே.

படம் தொடங்கிய முதல் இருபது நிமிடங்கள் தொய்வுடனே செல்கிறது. அதற்குக் காரணம் வழக்கமான காதல் மற்றும் காமெடி காட்சிகள். இயக்குநர் தாமரை செல்வன் இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் அளவிற்கு பேசப்பட்டிருக்கலாம்.

ஷாம் ஜோன்ஸ் நடிப்பில் முன்னேற்றம் தேவை. காதல், தவிப்பு, கோபம், அழுகை என அத்தனை உணர்ச்சிகளிலும் அசாத்தியமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஆனந்தி. இவரே படத்தின் பெரும் பலம். வழக்கம்போல், வேல ராமமூர்த்தி மிடுக்கான நடிப்பால் மிரட்ட, கரு.பழனியப்பன் அசால்டாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

திபு நினன் தாமஸ் இசை படத்திற்குத் தேவையான அளவுக்கு கைக் கொடுத்திருக்கிறது. படத்தில் 'போகாதே நெஞ்சே உன்னை கெஞ்சி கேட்கிறேன்' பாடல் ரசிக்க வைக்கிறது.

படத்தில் முக்கியமான காட்சியான மார்க்கெட்டில் நடக்கும் கொலை, இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத காட்சி. அதை எதார்த்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ் பிரபு.

சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி வந்துகொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் நதி குறிப்பிடத்தக்க இடத்தை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

 
தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...