Posted : செவ்வாய்க்கிழமை, ஜுன் 28 , 2022 17:53:35 IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியை முகேஷ் அம்பானி ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸின் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்ட நிலையில், முகேஷ் அம்பானி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பங்கஜ் மோகன் பவார் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநர்களாக ராமந்திர் சிங் குஜ்ரால், கே.வி.சுவுத்ரி ஆகியோர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.