செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க வர்த்தக அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க வர்த்தக அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளின் சந்தைகளின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் ‘பிராண்ட் இந்தியா’ பிரசாரத்தை தொடங்க வர்த்தக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த பிரசார திட்டத்தில், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், ஜவுளி, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு, மருந்து, பொறியியல் தேயிலை, காபி, நறுமணப் பொருள்கள் ஆகிய குறிப்பிட்ட துறைகளின் ஏற்றுமதிகளில் கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தரம், பாரம்பரியம், தொழில்நுட்பம், மதிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிய வருகிறது.