செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மாசிலாமணி படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.மனோகர் காலமானார்!
நடிகரும் இயக்குநருமான ஆர்.எஸ்.மனோகர் மாரடைப்பால் இன்று காலமானார்.
மாசிலாமணி படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.மனோகர் காலமானார்!
Posted : புதன்கிழமை, நவம்பர் 17 , 2021 14:56:58 IST
நடிகரும் இயக்குநருமான ஆர்.எஸ்.மனோகர் மாரடைப்பால் இன்று காலமானார்.
நகுல் மற்றும் சுனைனா இணைந்து நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'மாசிலாமணி' படத்தை ஆர்.எஸ்.மனோகர் இயக்கினார். அதனைத் தொடர்ந்து 'வேலூர் மாவட்டம்' என்ற படத்தை இயக்கியிருந்தார்.
மேலும் 'சலீம்', 'என்னை அறிந்தால்', 'நானும் ரௌடி தான்', 'வேதாளம்', 'மிருதன்', 'கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'தென்னவன்' படத்தில் விவேக்குடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.
இந்த நிலையில் அவர் இன்று (நவம்பர்-17) ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 61. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
|
|