செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் சணல் குமார் சசிதரண் கைது!
மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இயக்குநர் சணல் குமார் சசிதரண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
மஞ்சு வாரியர் புகார்: இயக்குநர் சணல் குமார் சசிதரண் கைது!
Posted : வெள்ளிக்கிழமை, மே 06 , 2022 12:01:56 IST
மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இயக்குநர் சணல் குமார் சசிதரண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழில் அசுரன் திரைப்படத்தில் தனுஷூக்கு மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மஞ்சு வாரியர். மலையாள சினிமாவில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேபோல், இயக்குநர் சணல்குமார் சசிதரண் விருதுகள் பெற்ற பல மலையாள படங்களை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் சணல் குமார் தனது முகநூல் பக்கத்தில், “நடிகை மஞ்சு வாரியர் கந்துவட்டிக்காரர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் நான் பதிவிட்டு 4 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, அவருக்கு நெருக்கமானவர்களோ இதுகுறித்து பதிலளிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மஞ்சு வாரியரின் மௌனம் எனக்கு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாள திரையுலகில் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் Women in Cinema Collective என்கிற அமைப்பிற்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். மிகத் தீவிரமான இந்த பிரச்சனையைப் பலரும் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர் என பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், “சசிதரன் தன்னை மிரட்டுவதாகவும், சோசியல் மீடியாவில் களங்கம் ஏற்படுத்தியதாகவும்” கொச்சியில் உள்ள காவல் நிலையத்தில் மஞ்சு வாரியர் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படியில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சனல்குமார் சசிதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
|