???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அர்னாப்பை பஞ்சராக்கிய காமெடி நடிகர்! இன்டிகோ விமானத்தில் நடந்த சம்பவம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   28 , 2020  23:35:37 IST


Andhimazhai Image

ரிபப்ளிக் டிவியின் இணை நிறுவனர் மற்றும் நெறியாளருமான அர்னாப் கோஸ்வாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  குனால் கம்ரா என்ற நகைச்சுவை நடிகருக்கு இன்டிகோ விமானத்தில் பயணிக்க ஆறு மாதங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக  இன்டிகோ விமான நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. “ மும்பையிலிருந்து  லக்னோ சென்ற 6E 531 விமானத்தில் நடந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு குனால் கம்ராவை 6 மாத காலம் இன்டிகோ விமானத்தில் பயணிக்க  தடைவிதிக்கிறோம். இவரது நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை” என்று பதிவிட்டுள்ளது.

 

இதுதொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி  “சக பயணிகளுக்கு தொல்லை தரும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மற்ற ஏர்லைன் நிறுவனங்களும் குனால் கம்ராவுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

 

இதற்கு நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்ட ட்விட்டில் “எனக்கு தடைவிதித்ததற்கு நன்றி. ஒருவேளை மோடிஜீ ஏர் இந்தியாவை நிறந்தரமாகவே நீக்கிவிடலாம்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக குணால் கம்ரா இன்டிகோ விமானத்தில் நடந்த சம்பவத்தின்  வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். அந்த  வீடியோவில், அர்னாப் கோஸ்வாமியிடம் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். ஆனால், அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார்.

 

தொடர்ந்து, அந்த வீடியோவில் பேசும் குணால் கம்ரா, ‘Viewers wants to know' (பார்வையாளர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்) நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா எனக் கேள்வி எழுப்புகிறார். மேலும் பேசியுள்ள அவர், “நான் இதை ரோஹித் வெமுலாவிற்காகச் செய்கிறேன். ரோஹித் எழுதிய 10 பக்க தற்கொலைக் கடிதத்தை வாசிக்க நேரம் தேடுங்கள். உங்களுக்கு கொஞ்சமாவது இதயம் இருந்தால் இதைச் செய்யலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

ரோஹித் வெமுலா தலித் ஒடுக்குமுறைக்கு ஆளாகி 2016ம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து, அப்போது டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றிய அர்னாப் கோஸ்வாமி, விவாத நெறியாளராகப் பங்கேற்று, ரோஹித் மரணத்தை அரசியலாக்குவதில் ‘தலித்’ எனும் அடையாளம் பயன்படுத்தப்பட்டதா? என விவாதத்தில் கேள்வியெழுப்பினார் என்பது குறிப்பிடதக்கது.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...