அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரே மாதிரி உடை அணியும் கேரள நண்பர்கள்!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   08 , 2021  15:54:33 IST


Andhimazhai Image

கேரள மாநிலம் ஆலாப்புழ மாவட்டத்தில் உள்ள காயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரனும், உதயகுமாரும். நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் இருவரும் தையல்காரர்கள். இவர்களைப் பற்றிக் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இருவரும் ஒரே மாதிரியான உடையை அணிவது தான்.


தைப்பதற்கு ஒரே நிறத்திலும், ஒரே தரத்திலும் துணியை வாங்கும் இருவரும், அதை தனித் தனியாக பேண்ட் சட்டை தைத்து அணிந்து கொள்கின்றனர். இருவரும் 1988ஆம் ஆண்டு முதல்  ‘பிகே டெய்லர்ஸ்’ என்ற கடையை ஆரம்பித்து நடத்திவருகின்றனர். இந்த ‘பிகே’ பெயரானது, பச்சு மற்றும் கோவலன் என்ற பிரபல கேரள கார்டூன்களின் முதல் எழுத்தாகும். அந்த பெயரிலேயே அப்பகுதி மக்கள் இருவரையும் அழைத்து வருகின்றனர்.


இருவரின் வீடும், 2003ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் இருந்துள்ளது. அதன் பிறகு இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இருவரும், தினசரி  காலையில் பேசிக்கொள்வது வழக்கம். அப்போது என்ன உடை அணியலாம் என்பது குறித்து முடிவு செய்யும் இருவரும்,  ஒரே மாதிரி உடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இருவருக்கும் இதுவரை மஞ்சள் நிறத்திலான ஆடை மட்டுமே கிடைக்கவில்லை என்கின்றனர். அதேபோல், இவர்களுடைய மனைவிகளும் ஆரம்பத்தில் ஒரே நிறத்தில் ஆடை அணிந்துள்ளனர். பின்னர், அவர்களுக்கு ஆடையைத் தேடி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அதை அவர்கள் கைவிட்டுள்ளனர்.


ஊடகங்கள் இவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட பின்னர் தான், பெரும்பாலானவர்கள் இவர்களின் உண்மையான பெயர் தெரியவந்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...