Posted : திங்கட்கிழமை, ஆகஸ்ட் 29 , 2022 15:02:54 IST
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி தொலைத் தொடர்பு சேவையை தீபாளி அன்று அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, “ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி தொலைத் தொடர்பு சேவையை தீபாளி அன்று அறிமுகம் செய்கிறது. முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்த சேவை தொடங்க இருக்கிறது.
அடுத்த ஆண்டிற்குள் நாட்டின் மூலை முடுக்கெங்கும் 5ஜி சேவை கொண்டு செல்லப்படும். இதற்காக 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.