![]() |
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன்Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 , 2021 08:30:43 IST
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பேசிய அவர், 23 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைமையில் ஆட்சி அமைத்து, கறுப்பு, சிவப்பு கொடி பறந்த மண் புதுச்சேரி எனவும், இந்த மண்ணில் மீண்டும் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இங்குள்ள அனைவரின் உணர்வுகளையும் ஸ்டாலினிடம் சொல்ல இருப்பதாகவும் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றிபெறாவிட்டால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக பேசி முடித்தார்.
|
|