அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது - முதல்வர்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   13 , 2022  17:18:34 IST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவர்கள் 43 போ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 போ் என மொத்தம் 55 பேரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே மீனவ சங்கங்கள் மற்றும் உறவினர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் முதற்கட்டமாக ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கைச் சிறையிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் காவல் ஜனவரி 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...