அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பதவி விலகுகிறாரா மகிந்த ராஜபக்சே?

Posted : சனிக்கிழமை,   மே   07 , 2022  14:19:39 IST

இலங்கைப் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகிந்த ராஜபக்சேவை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் பதவியை விட்டு விலக வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கும் பொருட்டு நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு, மகிந்த ராஜபக்சேவை, அதிபர் கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது இவ்விவகாரம் தொடர்பாக வரும் திங்கள் அன்று தனது முடிவை அறிவிப்பேன் என மகிந்த ராஜபக்சே பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகி விட்டதாக வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...