![]() |
வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லாம் செய்ய முடியுமா?Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 13:46:53 IST
அலுவலக வேலையிலிருந்து தப்பிக்க ஒருவரால் இப்படி எல்லாமா செய்ய முடியுமா! தொழில்நுட்பம் உங்களுக்குக் கைவரப்பெற்றால் அது சாத்தியம் என நிரூபித்திருக்கிறார் ஐடி ஊழியர் ஒருவர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமூகவலைதளம் ஒன்றில் தான் எப்படி வேலை பார்க்கிறேன் என்பது குறித்த ஒரு பதிவை எழுதியுள்ளார். அவரின் அந்த பதிவு சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் வைரலாகிப் போனது.
அதேபோல், அவரின் பதிவுக்குப் பலரும் கமெண்ட் செய்ய, அதற்குப் பதிலும் அளித்துள்ளார் அவர். தன்னுடைய இந்த செயலுக்காக, தான் வேலை பார்க்கும் நிறுவனம் தன்னை வேலையை விட்டு நீக்காது எனவும், அப்படி செய்தால் அது அவர்களுக்குத்தான் இழப்பு என்றும் ஒரு கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
|
|