அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழ்த்தாய் வாழ்த்து: கலைஞர் திருத்தியது செல்லும் - நீதிமன்றம்! 0 பஞ்சாப் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக! 0 இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! 0 ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்! 0 தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு! 0 அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி 0 வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று! 0 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான -2வது ஒருநாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி! 0 வேலையிலிருந்து தப்பிக்க இப்படி எல்லம் செய்ய முடியுமா? 0 டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை - பிரதமர் மோடி 0 சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் 0 நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று! 0 தமிழ்நாட்டில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடக்கம்: மு.க.ஸ்டாலின் 0 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு 0 யூடியூபை ஏன் தடை செய்யக் கூடாது? நீதிமன்றம் கேள்வி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   06 , 2021  21:35:53 IST

ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் டெல்லி ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது இரு நாடுகளின் நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. விண்வெளி, ராணுவம், அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், இலக்கியம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முன்னதாக பேசிய அதிபர் விளாதிமீர் புதின், ரஷ்யாவிற்கு இந்தியா சிறந்த நட்பு நாடாக உள்ளது.  எதிர்காலத்திலும் இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவானதாகவே இருக்கும்.

இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். வேறு எந்த நாட்டுடனும் இல்லாத வகையில் ராணுவம், தொழில்நுட்பம், வணிகத்தில் இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்பை ரஷ்யா வழங்கி வருகிறது.

இரு நாடுகளின் முதலீடுகள் 38 பில்லியன் டாலராக உள்ள நிலையில் ரஷிய தரப்பில் மேலும் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் உற்பத்தி தளவாடங்களில் இந்தியாவிற்கு ரஷ்யா உதவி வருகிறது.

இரு நாடும் இணைந்து தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சியை காண உள்ளன. அவை இந்தியாவிலும் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...