அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒடுக்கப்பட்ட மக்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை தரவில்லை - எழுத்தாளர் சுகிர்தராணி

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   26 , 2021  12:00:32 IST


Andhimazhai Image

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேற்குவங்க எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி எழுதிய ‘திரௌபதி’ என்ற சிறுகதையையும், தமிழகத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகளையும் டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. ஆங்கிலத் துறையில் சேர்ந்த பேராசிரியர்களுக்குத் தெரியாமலேயே படைப்புகள் நீக்கப்படன.இது தொடர்பாக எழுத்தாளர் சுகிர்தராணி தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நீக்கப்பட்ட தகவலே செய்திகள் வாயிலாகத்தான் எனக்குத் தெரியவந்தது. பல்கலைக்கழகத்திலிருந்து யாரும் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஏனெனில் அது தொடர்ந்து நடப்பதுதான். மஹாஸ்வேதா தேவியின் படைப்புகள் பழங்குடி மக்களின் வாழ்வியலை சொல்லும் படைப்புகளாக இருந்தன. அதுவும் நீக்கப்பட்டுள்ளது. நானும் எழுத்தாளர் பாமாவும் எழுதிய படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் படைப்புகளாக, பட்டியலின பெண்கள் மீதான வன்முறைகளைப் பேசும் படைப்புகளாக இருந்தன. அவையும் நீக்கப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரலை காணாமல் ஆக்குவதை ஏற்றுக் கொள்ள இயலாது.

 

நீக்கப்பட்ட பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பதிலாக உயர் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. எங்களுடைய படைப்புகள் விளிம்புநிலை பெண்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அது சமூக மாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. இதற்குப் பின்னணியில் சாதியப் பின்புலம், இந்துத்துவ பின்புலம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஒரு எழுத்தாளராக என்னுடைய கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், “டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.
 


பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.” என வலியுறுத்தியுள்ளார்.


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...