![]() |
ஹைதராபாத்: ராமானுஜரின் பிரமாண்ட சிலையை திறந்து வைக்கும் பிரதமர்!Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 21 , 2022 18:30:53 IST
ஹைதராபாத் அருகே சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமானுஜர் சிலையை பிப்ரவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
தெலங்கானா மாநிலம், ஷம்ஷாபாத்தில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் ராமானுஜருக்கு 216 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு வருகிறது. 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறையை மட்டும் அமைத்துள்ளனர்.
தொடர்ந்து கருவறை அமைந்துள்ள உள் அறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 13-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|