அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தங்க மகன் தனுஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - இயக்குநர் பாரதிராஜா

Posted : புதன்கிழமை,   ஜுலை   28 , 2021  10:22:50 IST

“தங்க மகன்” தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

நடிகர் தனுஷ் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

இந்நிலையில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும். ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவது உண்டு. நிஜ வாழ்க்கையில் இப்படி பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன்; எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் நான் என்கின்ற அகந்தை அற்ற பணிவு, சிறந்த கலை, தொழில் நுட்ப அறிவு இது போதும்டா… இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக்கதவைத் தட்டும்.பேரன்புமிக்க தங்கமகன் தனுஷ் இன்றைய நன்னாளில் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...