குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 24 , 2022 11:16:50 IST
குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
2002ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு, 2002இல் குஜராத் முதல்வராக இருந்த இன்றைய பிரதமர் மோடி உள்ளிட்ட 59 பேருக்குத் தொடர்பில்லை என கூறி விடுதலை செய்தது.
இதற்கு எதிராக கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஸாகிரா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்ப்பளித்த நீதிமன்றம், இத்தகைய மனுக்கள் மேல்முறையீட்டுக்கு தகுதி அற்றது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.