அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - முத்தரசன்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   27 , 2021  17:50:09 IST

ஆளுநர் தனது கடமைப் பொறுப்புகளை அதன் எல்லைக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி ஆளுநர், அரசின் தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரும் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்கு அறிக்கை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த முறை மக்களாட்சி முறைக்கு மாறானது. அதிகார அத்துமீறலாகும்.


தமிழ்நாட்டுக்கான ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படும் போதே சர்ச்சைக்குள்ளானார். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸூம் தங்கள் செயல் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முகவராக அவர் அனுப்பப்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. இன்று நடக்கும் நிகழ்வுகள் அதனை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளன.


அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற ஆளுநரின் செயல்பாட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் நிராகரிக்கும் அதிகாரம் ஏதும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. மாநில அரசிடம் ஏதேனும் விபரம் பெற வேண்டிய தேவை ஆளுநருக்கு ஏற்பட்டால் அவர் முதலமைச்சர் மூலமாக பெற வேண்டும். அதுதான் மக்களாட்சியின் மாண்புக்கு மதிப்பளிக்கும் பண்பாடாகும். இதற்கு முன்னர் இருந்த ஆளுநர் அத்துமீறி செயல்பட்டு, சர்ச்சையில் சிக்கி, சென்ற இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி எதிர்ப்பை சந்தித்தார் என்பதை இப்போதைய ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும்.ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். ஆளுநர் தனது கடமைப் பொறுப்புகளை அதன் எல்லைக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற பிரச்சினைகளில் தலைமைச் செயலாளர் கூடுதல் எச்சரிக்கையுடன், அமைச்சரவை அல்லது முதலமைச்சர் ஆலோசனை பெற்று செயல்படுவது அவசியம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...