அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  11:40:51 IST

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்தநிலையில் கேரளாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  பெரிய மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது.


கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

 
முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூடப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...