அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 19: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   15 , 2022  14:08:57 IST


Andhimazhai Image

ப்ளூட்டி மற்றும் டாமியின் மறைவு என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும், அதைத் தொடர்ந்த சில மாதங்களில் இயல்புக்கு மாறாக சதா சோகத்துடனும் கோபத்துடனும் நான் இருந்தேன். பணியிடத்தில் நிகழ்ந்த சில குளறுபடிகளும், வீட்டில் உருவாகிவிட்ட சில புதிய பொறுப்புகளும் என் நிலைக்கு கூடுதல் காரணங்கள். மெல்ல இயல்புக்கு வந்து, இருக்கிற நாய்களை ஒழுங்காக வளர்த்தால் போதும் என்ற மனநிலையை வலிந்து ஏற்படுத்திக் கொண்டேன். பூப்பி, டெட்டி, சாக்கி, டேனி நான்கு பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போட்டோம். டேனிக்குக் கூடுதல் கவனிப்பு தேவையாக இருந்தது. பெரிய டேனி இருந்தபோது அதற்கு ஒரு வயதிற்குள்ளாக டிஸ்டம்பர் தொற்று ஏற்பட்டு கடைசிக் காலம் வரை ஒரு காலில் மட்டும் நடுக்கம் இருந்ததே, அந்த நினைவில் குட்டி டேனியைக் கவனித்து வருகிறோம்.

 

அம்பாசமுத்திரத்தில் என் சின்ன மாமனார் வீட்டில் அடிக்கடி லாரா, ராக்கி ஆகிய பெண் கிரேட் டேன்களை வளர்த்தார். அவை குட்டி போடுகையில் ஒன்றிரண்டை எங்கள் ஊர்ப் பக்கம் தெரிந்தவர்களிடம் வளர்க்கத் தந்திருக்கிறார். நண்பர் ஒருவருக்குக் கொடுத்திருந்த ஒரு குட்டியை அவர் சரியாக கவனிக்காமல் விட்டு அது இறந்துவிட்டது. இன்னொரு உறவினர் வீட்டிற்கு வந்த நாய்க்குட்டியும் அப்படித்தான். இதுவே மற்ற இனங்களை விட கிரேட் டேன்கள் மீது நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தக் காரணம்.

 

காலமும் நேரமும் யாருக்காகவும் நிற்காது என்று கூறுவதைப் போல் அடுத்து ஆறுமாதம் ஆகிவிட, கடந்த டிசம்பரில் சாக்கிக்கு மறுமுறை உதிரப்போக்கு ஏற்பட்டது. இந்த தடவை கருவுற்று விடக்கூடாது என்பதற்காக ரொம்ப ரொம்ப மெனக்கிட்டோம். அபர்ணா, "அப்பா, இந்த தடவையும் சாக்கி ப்ரக்னென்ட் ஆச்சுன்னா அது பாவம் பா. Puppy mill மாதிரி ஆயிடும் பா" என்றாள். இப்படித்தான் எப்போதாவது வாசித்ததை சரியான நேரத்தில் மேற்கோள் காட்டுவாள் அவள். எங்கிருந்து தெரிந்து கொள்கிறாள் என்பது ஆச்சரியம் தான். அப்புவே சொல்லிவிட்டாள் பின் அப்பீல் ஏது.. இரண்டாவது உதிரப் போக்கின் போது சாக்கியை டெடி, பூப்பியிடமிருந்து வெற்றிகரமாக பாதுகாத்து வைத்தோம். மூன்றாவது முறையாக, போன மாதத்தில் சாக்கிக்கு ஹீட்ஸ் வந்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண் டேஷண்ட்கள் இருப்பதாகத் தகவல் தெரிந்த இடங்களைத் தொடர்பு கொண்டோம். ஒரு இடத்தில், எங்களிடம் ஆண் நாய் இருக்கிறது, ஆனால் அதற்கு ஏதோ உடல் நலக்குறைவு அதனால் இப்போது மேட்டிங் விடுவதில்லை என்றார்கள். திருநெல்வேலியில் இரண்டு இடங்களில் டேஷண்ட் இருந்தது. இரண்டு மூன்று முறை காரில் திருநெல்வேலி  போய்விட்டு வந்தாள் சாக்கி. கார் பயணம் ஒத்துக் கொள்ளவில்லை போலும் ஒவ்வொரு முறை காரில் ஏற்று கையிலும் வாந்தி எடுத்தாள். அடுத்தடுத்த முறைகளில் காரில் ஏற தயக்கம் காட்டினாள். ஒரு தடவை நான்கு நாட்களுக்கு மேல் ஒரு பண்ணையில் விட்டும் வைத்து பின்கூட்டி வந்தோம்.

 

ஹீட்ஸ் ஏற்பட்ட முதல் சில நாட்களில் பாதுகாப்புக்காக அதை மட்டும் முன் வாசலில் விட்டு வைத்திருக்க, செல்லம் கொஞ்சியபடி வீட்டுக்குள் வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து கொள்ளும். சரி, இருந்துவிட்டு போகட்டும் இன்னும் ஒரு வாரம் தானே என்று விட்டுவிட்டோம். இப்போது பார்த்தால் எப்போதும் அங்கேயே வந்து படுத்துக் கொள்கிறது. கார் கிளம்புவதைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கிறது. மீண்டும் காரில் ஏற்றி எங்காவது கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் போலும். "எங்கேயும் உன்னை கொண்டு போய் விடமாட்டோம் சாக்கி.. பயப்படாதே!" என்று கூறி வருகிறோம். மேட்டிங் சென்ற இடத்தில், சரியா மேட்டாகலை அடுத்த முறை முயற்சிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்கு சென்று வந்து 15 நாட்களாகி விட்ட நிலையில் கருவுற்றிருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படுகின்றதா என்று பார்த்து வருகிறோம்.

 

முதல் சில நாட்கள் வீட்டிற்குள் ஒரு பீரோவின் அடியில் வந்து படுத்து பழகிவிட்ட சாக்கி அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கிறது. எப்படியாவது கதவைத் திறக்கையில் கால்களுக்குள்ளாக நுழைந்து உள்ளே வந்து விடுகிறது. சில சமயம் எல்லாரும் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் என்னையும் சேர்த்துக் கொள்ளேன் என்ற பாவனையில் ஊடே வந்து அமர்கிறது. பெட்ரூமுக்குள் கலகலப்பும் சிரிப்புமாக சத்தம் கேட்டால், அடைத்திருக்கும் கதவை வந்து கைகளால் தட்டி தன் வழக்கமான மெல்லிய ஒலியை எழுப்புகிறது. ஆண் நாய்களிடம் இருக்கும் முரட்டுத்தனம் அறவே இல்லை. போகப் போக கிளிப்பையூவை சாக்கி கடித்து விட்டதைக் கூட மன்னித்து விடுவேன் போலிருக்கிறது.

 

சாக்கிக்கான தொடர் கவனிப்பில் டேனி பின்தங்கிப் போய்விட்டது. சமீபத்தில் தான் டேனி தன் முதல் பிறந்த நாளை நிறைவு செய்திருக்கிறது. கால்சியம் விட்டமின் மாத்திரைகளைக் கொஞ்ச நாள் நிறுத்தியதில் அதிக மெலிவு தெரிகிறது. இருந்தும் 'லயன்'ஸ் ஷேர்' என்பார்களே அது போல் முக்கால்வாசி உணவை டேனி தான் சாப்பிடுகிறது. மீதி கால்வாசி உணவு பூப்பிக்கும், சாக்கிக்கும் டெட்டிக்கும்.

 

டெடி மட்டும் தன் உரிமைப் போரை நிறுத்தவே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக சாக்கிக்குக் கிடைக்கும் அதீத கவனிப்பில் கொலை காண்டாகியிருக்கிறது டெடி. கடந்த ஏழு நாட்களாக வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து குரைக்கிறான். என்னிடம் தான் எல்லா காரியமும் செல்லுபடியாகும் என்ற நினைப்போ என்னவோ, நான் சமையலறைக்குப் போனால் அந்தப் புறத்து ஜன்னலுக்கு வருகிறது. பின்வாசலுக்குப் போனால் அங்கே வந்து குரைக்கிறது. மொத்தத்தில் அதன் கோரிக்கை, 'நான் தான் ஃபிரண்ட் ஆபீஸ் டியூட்டி பார்ப்பேன்' என்பது. ஓர் இரண்டு நாட்கள் அதை முன்புறத்திற்கு மாற்றி விட்டோம். சும்மா அடைந்திருக்கும் கோழிகளையும், ஓய்வெடுக்கும் வாத்துகளையும் போய் தொல்லை செய்கிறது."அதை ஏன்டா பாடா படுத்துற?" என்று கேட்டால் பம்மிக் கொண்டு நிற்கிறது. எத்தனை எத்தனை கவலைகளுடன் வீட்டிற்கு வந்தாலும் எங்கள் செல்லங்களின் ஏதாவது ஒரு ஒற்றைச் செய்கை அப்படியே மனதைக் குளிர வைத்து விடுகிறது. ஓரிரு நாட்கள் வெளியூர் போனால் நாய்கள் இல்லாமல் சிறுவயதில் எப்படி இருந்தோம் என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்காகவே அவற்றின் குறைபாடுகளையும் அசௌகரியங்களையும் புறந்தள்ளி விடுகிறோம்.

 

எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பைப் பொழியும் இன்னொரு ஜீவனும் இந்தக் கதையில் வருகிறது. அதுதான் கும்பிடு குருசாமி என்ற என் நாத்தனார் வீட்டு நாய். எங்கள் ஊரிலேயே வேறொரு ஏரியாவில் அவர்கள் இருக்கிறார்கள். ஸ்கூபி என்பது அதன் இயற்பெயர். இந்தத் தொடர் ஆரம்பித்த புதிதில் எடிட்டர் ஒரு கேள்வி கேட்டார், 'இவ்வளவு உயிரினங்கள் வளக்குறீங்களே.. நரி கிரி எதையும் புடிச்சு வளர்க்கலையா?' என்று. நரி இல்லாத குறையை ஸ்கூபி தீர்த்து வைக்கிறது. கானகத்தின் குரல் நாவலில் வருவது போல் ஏதாவது நரியினுடைய ஜீன் ஸ்கூபியின் முன்னோர் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும். அதன் உருவ அமைப்பும் பாவனைகளும்  நரியை நினைவுபடுத்தும். இதுவரை அதற்கு நான் ஒரு பிஸ்கட் கூட வாங்கிப் போட்டதில்லை. இருந்தும் பார்க்கும் நேரங்களில் நம் கால்களைப் பிடித்து படுத்துக் கொள்வதும், மாறி மாறி காலில் விழுவது விழுந்து வணங்குவது போல் செய்வதும் அதன் குணாதிசயங்கள். இதனால் தான் 'கும்பிடு குருசாமி' என்ற காரணப் பெயரும் அவனுக்கு வாய்த்தது. அவனது ஏரியாவில் எங்களுக்கு ஒரு கட்டிட வேலை முன்பு நடந்து கொண்டிருந்தது. அவனாகவே அதன் வாட்ச்மேன் பதவியை எடுத்துக் கொண்டான். அவனது உடல் மொழியால், 'நான் இருக்கிறேன்; நீங்கள் காவலுக்கு மனிதர்கள் யாரையும் நியமிக்க வேண்டாம்' என்பதை என்னிடம் உணர்த்திக் கொண்டே இருப்பான். இப்போது என் நாத்தனார் குடும்பம் வேறு வீட்டிற்கு இடம்பெயர்ந்து விட்டார்கள். இருந்தாலும் பழைய ஏரியாவையும் போய்ப் பார்த்து காவல் பணியைத் தொடர்கிறான். அவனுக்கு பத்து வயதுக்கு மேலாக இருக்கும். வயது என்ன, எந்த இனத்தைச் சேர்ந்தவன், தங்கள் வீட்டிற்கு எப்படி வந்தவர் என்பதும் அவர்களுக்கே நினைவில்லை. இரண்டு மூன்று முறை வாகனங்களில் அடிபட்டும், பெரும் உடல் நல குறைவுகள் ஏற்பட்டும் வெகு சீக்கிரமாக மீண்டு விட்டான். அவனுடைய 'wild gene' அதற்குக் காரணம் என்கிறாள் அபர்ணா. இப்போது அவனது புலன்கள் மங்கத் தொடங்கி விட்டன. பெரும்பாலான நேரங்களில் ஓய்வில் இருக்கிறான்.

 

எங்கள் வீட்டில் பூப்பியும் 'மாஸ்டர்லி இன் ஆக்டிவ்' என்போமே அதைப்போல எப்போதும் படுத்தே கிடக்கிறது. தன் சக்தியை வேண்டாத விஷயங்களில் தலையிட்டு விரயம் செய்வதில்லை. கண்பார்வையும் துரித செயல்பாடும் எப்பொழுதும் போல நன்றாகவே இருக்கிறது. இன்று கூட பத்து அடி தூரத்தில் நின்று நான் எதையோ அவன் வாயினருகே போட, மிகச் சரியாக 'கேட்ச்' பிடித்தான். இங்கே பூப்பியும், அங்கே ஸ்கூபியும் படுத்திருப்பதைப் பார்க்கையில் அவை இந்த மண்ணில் இருக்கும் வரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அலை மோதுகிறது. அடுத்த முறை செல்லும்போது ஸ்கூபிக்கு ஒரு பிஸ்கட் பொட்டலம் வாங்கிச் செல்ல வேண்டும். இப்படியே எங்கள் நாளும் பொழுதும் நாய்களுடனும், இன்ன பிற உயிரினங்களுடனும் கழிகிறது. எங்கள் வாழ்வை சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் எங்கள் செல்லப் பிராணிகள் ஆகியிருக்கின்றன. Going home is a word; going home to pets is an emotion என்று இந்த கணம் எனக்குத் தோன்றுகிறது.

 

எங்கள் பிற பிராணிகளையும் அவற்றின் சேட்டைகளையும் பற்றிக் கூட இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றது. பசுமாடு வாங்கி வளர்க்க ஆரம்பித்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. அதன் மூன்றாம் குட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். லேட்டஸ்ட் வரவாக ஒரு ஆட்டுக்குட்டி. அதுவும் பூப்பியும் அருகருகே படுத்திருக்கையில் பார்க்க, சமயத்தில் அண்ணண் தங்கை போல் இருக்கிறது. கோழிகளும், வாத்துக்களும் தங்கள் செய்கைகளால் எனக்கு சிறார் கதைகள் எழுதுதற்காக பல கருக்களைத் தருகின்றன. எங்கள் வீட்டு பறவையினங்களில் பிக் பாஸ் போல் ஒரு வான்கோழி இணை நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறது.

 

அந்திமழை வாசகர்களும், ஆசிரியர் குழுவும் அடிக்க வரவில்லை என்றால், இன்னும் சிலபல வருடங்கள் கழித்து மற்ற உயிரின வளர்ப்பிலும் நாய் வளர்ப்பு அளவிற்கு அனுபவம் பெற்றபின் மாடு வளர்த்த கதை, கோழி வளர்த்த கதை இவற்றைச் சொல்ல வருகிறேன். கடந்த 18 வாரங்களாக உங்கள் நேரத்தை என்னுடன் செலவிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். 'டோரா த எக்ஸ்ப்ளோரர்' பாஷையில் சொல்லப்போனால், 'இந்தப் பயணம் உங்களுக்கு ரொம்பவே சுவாரசியமா இருந்திருக்கும்னு நம்புறேன்'

(முடிந்தது)

தொடர் குறித்த உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் akhilandabharati@gmail.com

 

முந்தைய பகுதிகள்

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -01: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -02: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் புதிய தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -03: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -04: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -05: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -06: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -07: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -08: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -09: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 10: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 11: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 12: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 14: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!


ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 15: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 16: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

 

 

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!


ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 18: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...