அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச கட்டிங், ஷேவிங்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   28 , 2021  11:51:38 IST


Andhimazhai Image

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் முக்கியத்துவம் குறித்து அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா மூன்றாவது அலை பரவத்தொடங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவது அவசியமான ஒன்று.



அந்தவகையில், பீகார் மாநிலம் தர்பாங்காவில் சொந்தமாக சலூன் கடை வைத்திருக்கும் ஷம்பு குமார் தாக்கூர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்  கொண்டதற்கான சான்றுகளையோ அல்லது புகைப்படங்களையோ காண்பிப்பித்தால் அவர்களுக்கு இலவசமாக முகச்சவரம் மற்றும் முடித்திருத்தம் செய்துவிடுகிறார்.



இது தொடர்பாக ஷம்பு குமார் தாக்கூர் கூறுகையில், “தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் முக்கியத்துவம் பற்றி அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எண்ணினேன். அதன்படி இந்த ஆஃபரை பற்றி மக்களிடையே தெரியப்படுத்துவதற்காக சிறு குழு ஒன்றையும் அமைத்துள்ளேன். இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் இதன் மூலம் பயன் அடைந்திருக்கின்றனர்” என்றார். ஷம்பு குமார் தாக்கூரின் இந்த செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு தனிமனிதரும் இதுபோன்ற நெருக்கடியான சூழலில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...