அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   21 , 2022  17:50:20 IST

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று காலமானார். அவருக்கு வயது 77.

 
சேடப்பட்டி ரா.முத்தையா கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். 2000 வரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். அதனால், ஜெயலலிதா அதிமுக பொருளாளராக சேடப்பட்டி ரா.முத்தையாவை நியமித்தார்.

 
அதன்பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக சிறிது காலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

 
சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எம்.பியாக இருந்தவர். 1998-ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

 
கடந்த 8-ம் தேதி மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த சேடப்பட்டி ரா.முத்தையாவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் அவருக்கு அளித்த சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.

 
இந்நிலையில், இன்று 1 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் சேடப்பட்டி ரா.முத்தையா காலமானார். அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...