அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஃபிங்கர் டிப் -2: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   17 , 2022  17:32:02 IST


Andhimazhai Image

டிஜிட்டல் உலகின் கருப்புப் பக்கங்களைப் பேசும்  வெப் சீரிஸ் தான் ‘ஃபிங்கர் டிப்-2’.
 
இயக்குநர் ஷிவாகர் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ஃபிங்கர் டிப் வெப் சீரிஸ், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாவது சீசன் தற்போது வெளியாகியுள்ளது.
 
வெவ்வேறு வாழ்க்கை மற்றும் தொழில் பின்புலம் கொண்ட பிரசன்னா, ரெஜினா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி, சரத் ரவி ஆகிய ஏழு பேரை சுற்றி தான் முன்னும் பின்னுமாக கதை நகர்கிறது.
 
ஏசிபி-யாக வரும் பிரசன்னாவின் உறவினர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர், இவருடன் இணையும் அபர்ணா பாலமுரளியும் இதே போன்ற ஒரு இழப்பை சந்தித்திருப்பார். இதற்கு காரணம் டிஜிட்டல் உலகம். இன்னொருபக்கம் யூடியூப் அட்வைஸ்களை கேட்டு காதலை சொல்லும் வினோத் கிஷன், இளம்பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சரத் ரவி. சோஷியல் மீடியா மூலம் அரசியல் ட்ரெண்டிங் செய்யும் கண்ணா ரவி என இந்த இந்த ஐந்து பேரின்  சிக்கல்களும்? அவர்களின் எதிர்காலமும் என்ன ஆனது என்பது தான் ஃபிங்கர் டிப் இரண்டாம் பாகத்தின் மீதிக் கதை.
 
கதாபாத்திரங்களுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
அன்றாடம் செய்தித்தாளில் படிக்கின்ற விஷயங்கள் தான் படத்தின் கதையென்றாலும், கதை நான் லீனியராக செல்வதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது. அதை ஓரளவுக்கு சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார் ஷிவாகர் ஸ்ரீநிவாஸ்.
 
 இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. படத்தில் வரும் சில லாஜிக் மிஸ்ஸை இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
 
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் நன்மைகள் இருந்தாலும், கவனத்தில் கொள்ளத் தக்க அளவுக்கு தீமைகளும் இருக்கிறது என்பதை இந்த சீரிஸ் ஓரளவு பதிவு செய்ய முற்பட்டிருக்கிறது.


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...