???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு 0 சுவரேறிக் குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ! 0 கர்நாடகாவில் போர்க்கொடி தூக்கும் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்கள்! 0 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3 மாதம் கெடு: அமைச்சர் எச்சரிக்கை 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! 0 முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி டெல்லி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள்! 0 யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு சிவசேனா எதிர்ப்பு! 0 பாலுக்கு பதிலாக மதுபான விலையை தமிழக அரசு உயர்த்தலாம்: கி.வீரமணி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அகதிகளாக வந்த 10 ஈழத்தமிழர்களை விடுதலை செய்க! ராமதாஸ் கோரிக்கை

Posted : புதன்கிழமை,   மே   07 , 2014  04:19:43 IST

 

அகதிகளாக தஞ்சம் கேட்டு வந்த 10 ஈழத்தமிழர்களையும் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரி யுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை காவல் துறை இரக்கமின்றி கைது செய்து சிறை வைத்திருப்பது ஒருபுறம் வருத்தமளிக்கும் நிலையில், இன்னொரு புறம் அவர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் மிகுந்த வேதனை தருகின்றன. ஈழத்தமிழர்களின் துயரம் இப்போதைக்கு தீராதா? என்ற ஏக்கமும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.

 

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இது தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் தலைமையிலான குழுவின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் இலங்கை அரசு மீண்டும் தமிழ் இளைஞர்களை தேடிப் பிடித்து சுட்டுக் கொல்லத் தொடங்கியிருக்கிறது.

 

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான உலகத்தின் கண்டனங்களையெல்லாம் கண்டு கொள்ளாத இலங்கை அரசு, அந்த நாட்டில் மீதமுள்ள தமிழர்களையும் கொன்றொழித்துவிட்டு முழுமையான சிங்கள தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

 

இவ்வளவுக்கு பிறகும் இலங்கையிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது எவ்வகையிலும் பயனளிக்காது. இனப் படுகொலை முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களிலிருந்து இலங்கையை பாதுகாத்ததுடன், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தியா பாதுகாத்து வருகிறது. அதன்விளைவாகத் தான் தங்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற துணிச்சலில் சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் இனப்படுகொலையை தொடங்கியுள்ளனர். இதைத் தடுக்காவிட்டால் இலங்கையில் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

 

எனவே, இலங்கை தொடர்பான அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அங்கு தமிழர்கள் கொல்லப்படுவதையும், கொடுமைப் படுத்தப்படுவதையும் தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அதேபோல், தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் தவறான அணுகு முறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

 

ஆஸ்திரேலியாவில் வழங்கப்படுவது போன்ற சலுகைகளை தமிழ் அகதிகளுக்கு இந்தியா வழங்க வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட அகதிகளில் 5 பேர் குழந்தைகள் என்பதாலும், அவர்களால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் அவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...