அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திமுக அரசு பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   16 , 2021  10:34:04 IST

திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தில் ரெய்டு நடவடிக்கையைக் கையிலெடுத்திருக்கிறது. நீதிமன்றம் இருக்கிறது. அங்கு நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்.
 

பொதுவாகவே, அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அதற்கு குற்றத் துணையாக இருக்கிற அமைப்புகளோடு கைகோர்த்து ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு.
புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சாக்குபோக்கு சொல்வதற்கு வசதியாக சிலரைக் கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு மாறானது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்திருக்கிற நிலையில் பணி செய்யவிடாமல் முடக்குகிற விஷயமாகவே இது மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இயக்கம் அதிமுக.


இது அரசினுடைய காவல் துறை. ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் இருக்கிறது. இது மன்னர் ஆட்சி அல்ல. சொத்துக் குவிப்பு குறித்து இவர்கள் எத்தனை சதவிகிதத்தை வேண்டுமானாலும் குறிப்பிடலாம். ஆனால், நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டுகின்ற வகையில் முன்னாள் அமைச்சர்களும், இயக்கமும் இருக்கும்.
பழிவாங்கும் நோக்கத்தில் கட்சியை முடக்க வேண்டும், மக்கள் மத்தியில் கட்சிக்கு ஒரு அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது" என்றார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...