அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை: பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   12 , 2021  16:07:28 IST

ராஜராஜ சோழன் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து ராஜராஜ சோழன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாரின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பா. ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...