அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 50 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பார்வதி தேவி சிலை கண்டுபிடிப்பு! 0 எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் 0 மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து 0 உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! 0 பயங்கரவாத தாக்குதல்: தமிழக வீரர் உட்பட 3 பேர் வீர மரணம் 0 மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு; கதறி அழுத போலீஸ்! 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய் சேதுபதி படத்தின் மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   02 , 2021  18:24:51 IST

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார்.

‘காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வெளியாகத் தயாராக இருக்கும் திரைப்படம் ‘கடைசி விவசாயி’.

இப்படத்திற்கு  முதலில் இளையராஜா இசையமைத்திருந்தார். அவர் பின்னணி இசையில் ஏற்கனவே கடந்த ஆண்டு அப்படத்தின் முதல் டிரைலர் வெளியானது.

அதற்கடுத்து இயக்குநருக்கும் இளையராஜாவிற்கும் கருத்து வேறுபாடு எழுந்த காரணத்தினால் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 2-வது டிரைலரின் பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் தான்.

இந்நிலையில் தன் அனுமதியைக் கேட்காமலும் தனக்குத் தெரியாமலும் இசையமைப்பாளரை மாற்றியதாக ‘கடைசி விவசாயி’ படக் குழுவினர் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்திருக்கிறார்.

டிசம்பர் இறுதியில் வெளியாக இருந்த இப்படம், இந்த புகாரால் சிக்கலைச் சந்தித்திருக்கிறது.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...