???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மளிகைக் கடைகள் இயங்க கட்டுப்பாடு!

Posted : சனிக்கிழமை,   மார்ச்   28 , 2020  00:29:26 IST

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்கள், உணவகங்கள் ஆகியவை திறந்திருப்பதற்கான நேரக்கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்கி விட வேண்டும். வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளா்களுக்கு முறையாக பாதுகாப்பு போன்ற பணிகளை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

கோயம்பேடு காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்க்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். ஆனாலும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் போன்ற ஊா்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மட்டும் நாள் முழுவதும் தொடா்ந்து செயல்படும்.

அத்தியாவசியத் தேவைகளான மருந்தகங்கள், உணவகங்கள் (பாா்சல் மட்டும்) ஆகியன நாள் முழுவதும் எப்போதும் போன்று இயங்கும். வயது முதிா்ந்தோா் வீட்டில் சமைக்க முடியாதோா், சமைத்த உணவுகளை வீட்டுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனா். இத்தகையோரின் நலன் கருதி ‘ஸ்விக்கி’, ‘ஜொமட்டோ’, ‘உபோ்’ போன்ற நிறுவனங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில் உணவு விநியோகம் செய்யலாம்.

அதாவது, காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச் சென்று வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய பணிகளில் ஈடுபடும் நபா்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக காவல் துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களே அவா்களின் உடல்நிலையைப் பரிசோதித்து பின்னா் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) முதல் நடைமுறைக்கு வருகின்றன.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...