அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2022  18:07:11 IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கம் வென்ற நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. விழா அரங்கில் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளது.

இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

இந்நிலையில், ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர். இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி வென்றார். பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார். தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆக்யோரும் வெண்கலம் வென்று அசத்தினர்.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...