???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் சீசன் 3: நாள் 1- தண்ணீருக்கு மீட்டர்…..முதல் கண்டதும் காதல் வரை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   25 , 2019  02:57:46 IST

பிக்பாஸ் சீசன் 3 யின் முதல் எபிசோட் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைதூக்கியதை சுட்டி காட்டும் வகையில் வீட்டில் இருப்பவர்களுக்கு தண்ணீரை சிக்கனமாக  பயன்படுத்த மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

 

பிக் பாஸ் வரலாற்றில் ’முதல் முறையாக’ தண்ணீர் மற்றும் எரிபொருளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. சமையல் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தினசரி 1000 லி தண்ணீரும், கழிவறை பயன்பாட்டிற்கு ஒருவருக்கு தினசரி 100 லி தண்ணீரும், சமையலுக்கு ஒரு வாரத்திற்கு 5 கிலோ எரிபொருளும் அளிக்கப்படுவதாக பிக்பாஸ் தெரிவிக்கிறார்.

 

இதை போட்டியாளர்கள் வரவேற்கின்றனர். ஆனால் பாத்திமா பாபு, மீட்டர் பொருத்தியது அவல நிலை என்று சொல்கிறார். முதல் முறை என்ற வார்த்தைக்காக அனைவரும் கைதட்டுவது  சரியான விஷயமா? என்று கேட்கிறார். சட்டென்று குறிக்கிடும் சேரன் தற்போது உள்ள நிலையில் இந்த கட்டுப்பாடு தேவை என்பதால்தான் வரவேற்று கைத்தட்டினோம் என்று கூறுகிறார்.

 

இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்வதற்காக குழுக்கள் பிரிக்கப்படுகிறது.  பிக்பாஸின் முந்தைய சீசன் போலில்லாமல் , புது முறையில் குழுக்கள் பிரிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவர் தனித் தனியாக அவர்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் அட்டையை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் வனிதா விஜயகுமார்  பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார்.

 

இதற்கு பிறகு வீட்டின் எல்லா போட்டியாளர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் சில டாஸ்க்குகளை கொடுக்க வேண்டும்.  அப்படி அவர்கள் கொடுக்கும் டாஸ்க்குகளை அந்த நபர் சிறப்பாக செய்துவிட்டால் அனைவரும் அவருக்கு மாலை அணிவித்து குடும்ப நண்பர்களாக ஏற்றுகொள்வர்.

 

இதைத்தொடர்ந்து இரவு சாப்பாட்டிற்கு பிறகு ஷெரினிடம் அபிராமி தனக்கு கவினை பிடிக்கும் என்கிறார்.  பிக்பாஸ் முதல் சீசனில்  ஓவியா ஆரவ்-வை பற்றி ரைசாவிடம்  இதைத்தான் சொல்வார். அதுபோலவே கவினை பற்றி ஷெரினிடம் அபிராமி தெரிவித்துள்ளார்.   மொத நாளிலேவா?

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...