![]() |
வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு!Posted : புதன்கிழமை, ஜுன் 08 , 2022 10:58:03 IST
வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த உயர்வின் மூலம் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, மே 4-ஆம் தேதி வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தி இருந்த நிலையில், தற்போது ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும் என்ற அபாய நிலை உருவாகியுள்ளது.
|
|