அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆட்டோ, டாக்சியில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   29 , 2021  12:19:33 IST

ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிகளைப் பின்பற்றக் கோரி ஜாகிர் உசேன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் பொதுமக்களிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஆட்டோ, டாக்சியில் கட்டணம் மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாகப் பார்க்க வேண்டும் என்றும்,  ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். மதுரையில் கட்டண மீட்டர் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தினர்.


மேலும், ஆட்டோ, டாக்சியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை ஆர்டிஓக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...