அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2022  11:03:21 IST

போதைப் பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும்  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காவல் துறை கண்காணிப்பாளர்கள் போதை தடுப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ” போதைப் பொருளுக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதை நினைக்கும் போது கவலையும் வருத்தமும் அதிகரிக்கவே செய்கிறது.  கடந்த ஆட்சியில் இது குறித்து கவனம் செலுத்தாமல் விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  நான் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் தான் இந்த மாநாட்டு. போதைப் பொருள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை, பரவுவதை, விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும்.


போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்டிராவை விட தமிழ்நாடு குறைவுதான் என நான் சமாதானம் அடையத் தயாராக இல்லை.


தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். போதைப் பொருள் தான் சாதி, மதம் மோதல்களுக்குத் தூண்டுதலாக அமைகிறது. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைப்பொருள் விற்கப்படுகிறதா எனது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


போதைப் பொருள் பயன்பாடு என்பது தனிமனித பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை. போதைப் பொருள் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது.  போதைப்பொருள் விற்பதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில், போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...