![]() |
புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜூன மூர்த்தி; வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!Posted : சனிக்கிழமை, பிப்ரவரி 27 , 2021 14:49:23 IST
இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் அர்ஜுன் மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தபோது, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி இருப்பார் என தெரிவித்திருந்தார். அதற்கடுத்த சில நாட்கள் கழித்து தான் கட்சி தொடங்கப் போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தபோது அதிர்ச்சி அடைந்தார் அர்ஜுன் மூர்த்தி.
இந்நிலையில், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற பெயரில் அர்ஜுன் மூர்த்தி புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே அறிக்கை ஒன்றை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனி அரசியல் கட்சி தொடங்க இருக்கும் அர்ஜுன் மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
|
|