அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தொல்லியல் அறிஞர் நாகசாமி காலமானார்!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   24 , 2022  10:40:41 IST

தமிழக தொல்லியல் துறையின் பிதாமகன் என புகழப்படும் அறிஞர் நாகசாமி, 91, வயோதிகம் காரணமாக நேற்று காலமானார்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுார் கிராமத்தை சேர்ந்தவர் நாகசாமி. தமிழக தொல்லியல் துறையின் முதல் இயக்குனராக பதவியேற்று பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்.சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் வசித்த அவர், வயோதிகம் காரணமாக நேற்று மதியம் காலமானர். அவரின் இறுதிச் சடங்கை, 26ஆம் தேதி நடத்த, அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டமும், இந்திய கலையியலில் டாக்டர் பட்டமும் பெற்ற நாகசாமி, இந்திய கலை, தொல்லியல், கட்டடக்கலை, இலக்கியம், கல்வெட்டு, பழங்காலவியல், நாணயவியல், இசை, நடனம் மற்றும் தெற்காசிய கலைகளில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். கடந்த 1959 முதல் 1965 வரை, சென்னை அருங்காட்சியக கண்காணிப்பாளராக இருந்தார். 1965இல், மாநில தொல்லியல் துறையை உருவாக்கி அதன் இயக்குனரானார். 1988இல் அத்துறையிலிருந்து ஓய்வு பெற்றார். பின், மத்திய அரசின் கலை, கல்வெட்டு ஆய்வுகளுக்கான ஆலோசகராக சேர்ந்து, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கீழ், புதுச்சேரி கல்வெட்டு, தஞ்சை பிரகதீஸ்வரர் கலாசார சொத்தை ஆவணமாக்கும் பணிக்கு தலைமை ஏற்றார். பூம்புகாரில் கடலாய்வு செய்து, சங்க கால சோழர்களின் சான்றுகளை கண்டறிந்தார்.

தமிழகத்தில், பூண்டியில் வரலாற்றுக்கு முற்பட்ட கால அருங்காட்சியகம், ஆற்காட்டில் இஸ்லாமிய அருங்காட்சியகம் உள்ளிட்ட, 12 அருங்காட்சியகங்களை உருவாக்கினார். தமிழக தொல்லியல் துறையில், கல்வெட்டு மற்றும் கலை சார்ந்த முதுகலை படிப்பைத் துவக்கினார். பல்வேறு அரண்மனை தளங்களை கண்டறிந்து சீரமைத்தார். கங்கைகொண்ட சோழபுரம், மதுரை, தாராசுரம் போன்ற மரபுச்சின்னங்களை பிரபலப்படுத்தும் வகையில், அவை சார்ந்து தொடர் கட்டுரைகள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்தினார்.

நாகசாமி தமிழ், ஆங்கிலத்தில் 120க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி விருதுகள் பெற்றுள்ளார். இவரின் வாழ்நாள் சாதனைக்காக தமிழக அரசு, 1995ல் கலைமாமணி விருதையும், மத்திய அரசு 2018இல் பத்மபூஷன் விருதையும் வழங்கி கவுரவித்தன.


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...