அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பட்னாவிஸ் துணைமுதல்வர் - பா.ஜ.க.வின் அடுத்த அதிரடி 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மன்னிப்புக்கேட்ட விக்னேஷ் சிவன்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   11 , 2022  13:39:13 IST

திருப்பதி கோவிலில் நடந்த விதிமீறலுக்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார்.


விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது.


திருமணத்துக்கு பிறகு நேற்று விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது சாமி தரிசனம் முடிந்தபிறகு கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்பொழுது நயன்தாரா காலணி அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதுதொடர்பாக விசாரணை நடத்தி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நடந்த தவறுக்காக மன்னிப்புக்கேட்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், திருமணம் முடிந்த பிறகு வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி வந்து ஏழுமலையனின் கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டோம். அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்தபோது எங்களை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.


இதனால் அங்கிருந்து சற்றுநேரம் வெளியேறி பின் மீண்டும் அப்பகுதிக்கு வந்தோம். அப்போது ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்திருந்ததை கவனிக்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...