Posted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26 , 2021 18:21:24 IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இப்படத்தில் ரஜினியுடன் மீனா, நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்தை வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அண்ணாத்த திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.