அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்! 0 பிரதமரிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? சேகர்பாபு விளக்கம் 0 சபாநாயகருக்கு கார்த்திக் சிதம்பரம் கடிதம்: நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக குற்றச்சாட்டு 0 சர்வதேச புக்கர் விருதை பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 13: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்! 0 மாநிலங்களைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் 0 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு! 0 மசூதிகள் கட்டுவதற்கு 36,000 இந்துக் கோயில்கள் இடிப்பு – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு! 0 சேத்துமான்: திரைவிமர்சனம்! 0 விஷமக்காரன்: திரைவிமர்சனம்! 0 குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! 0 பாலியல் தொழிலாளர்களை மாண்புடன் நடத்த வேண்டும்: காவல்துறை, ஊடகங்களுக்கு நீதிபதிகள் வழிகாட்டுதல் 0 பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி: அண்ணாமலை காட்டம் 0 பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்! 0 தமிழ் மொழி பழமையானது, தமிழ் கலாசாரம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது: பிரதமர் மோடி பேச்சு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்: தெலங்கானா முதல்வர் எதிர்ப்பு!

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   24 , 2022  19:03:51 IST

ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வு மத்திய அரசுக்கு பரந்த அளவிலான உரிமைகளை அளித்தாலும், மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் இரண்டுமே ஒன்றுக்கொன்று இணையானதுதான்.

ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் செய்வதால், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால் தெலங்கானா அரசு இதனைக் கடுமையாக எதிர்க்கிறது.

மக்களுக்குத் தேவையான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மாநில அரசுகள்தான் முன்னின்று செயல்படுத்தி வருகின்றன. அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகளே உறுதுணையாக உள்ளனர்.

இந்நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்குச் செல்ல வற்புறுத்துவது மாநில நிர்வாகத்தில்  தேக்க நிலையை ஏற்படுத்தும்.

அதுமட்டுமின்றி அவர்களது உரிமை அல்லது மாநில அரசுகளின் உரிமையின்றி அவர்களை மத்திய அரசு பணியில் ஈடுபட நிர்பந்திக்கவும் மசோதா வழிசெய்கிறது. இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சுமையையே ஏற்படுத்தும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...