செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
இறந்து போனவர்களின் கைரேகையை திருடி விற்கும் மாஃபியா கும்பலைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனின் கதையே ஏஜெண்ட் கண்ணாயிரம்.
கோயம்புத்தூரில் வசித்துவரும் கண்ணாயிரம் ஊருக்குள் சிறிய துப்பறிவாளராக வலம் வருகிறார். சொற்ப வருமானத்திற்கு சின்னச் சின்னதாக எதையாவது கண்டுபிடித்துக்கொடுக்கிறார்.அவர் ஒரு தொடர் கொலைகளைக் காண்கிறார். அவற்றைத் துப்பறியத் துவங்கும் கண்ணாயிரம் இறந்தவர்கள் அனைவருக்கும் இடையேயான ஒற்றுமையைக் கண்டறிகிறார். இறந்தவர்கள் யார்? எதற்குக் கொல்லப்பட்டார்கள் என்பதை கண்ணாயிரம் ஆராய்வது மீதிக்கதை.
தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் வெளியான ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக் தான் ஏஜெண்ட் கண்ணாயிரம். இப்படத்தை தெலுங்கில் இயக்கிய மனோஜ் பீத்தா, தமிழிலும் இயக்கி இருக்கிறார். தொய்வான காட்சி அமைப்புகள், யூகிக்க கூடிய திருப்பங்கள், வழக்கமான வசனங்கள் என படத்தை பின்னுக்கு இழுப்பவை ஏராளம். சந்தானம் வித்தியாசமாக நடித்திருத்தலும், அது அவருக்கு பொருத்தமாக இல்லை. சில இடங்களில் அவர் செய்யும் காமெடி சற்று ஆறுதல். நாயகி ரியா சுமன் காமிரா தூக்கி கொண்டு வருவதோடு சரி. மேலோட்டமான கதாபாத்திர உருவாக்கம். படத்தில் முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், சுருதி ஹரிஹரன் என பலர் நடித்திருந்தாலும், கதை சந்தானத்தை மையப்படுத்தியே செல்வதில் மற்றவர்களின் கதாபாத்திரம் மனதில் நிற்கவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஒளிப்பதிவாளர் உழைப்பு கவனத்தை ஈர்க்கிறது.